Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலைத் தொடர்ந்து தனுஷும் பரவை முனியம்மாவுக்கு உதவி

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (12:57 IST)
நடிகையும், பாடகியுமான பரவை முனியம்மாவுக்கு தனுஷ் உதவி செய்துள்ளார்.
 
தூள் படத்தில், சிங்கம் போல பாடலை பாடி நடித்து சினிமாவில் அறிமுகமானவர் பரவை முனியம்மா. அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியும் நடத்தி வந்தார்.
 
முதுமை காரணமாக அவர் திரைப்படங்களில் நடிப்பது குறைந்தது. வருமானம் குறைந்த நிலையில் உடல்நலக்கோளாறும் சேர்ந்து கொள்ள சிகிச்சைக்கும், மருந்துக்கும் பணமில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
 
அவரைக் குறித்த செய்தியை பத்திரிகைகள் வாயிலாக அறிந்து கொண்ட விஷால் சிகிச்சை மற்றும் மருந்து செலவை ஏற்க முன்வந்தார். அத்துடன் மாதம் 5,000 ரூபாய் அவருக்கு தருவதாகவும் உறுதி அளித்தார்.
 
விஷாலைத் தொடர்ந்து தனுஷும் பரவை முனியம்மாவுக்கு பண உதவி செய்துள்ளார். 

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments