Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா…? கசிந்த தகவல்!

vinoth
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (16:19 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து  இளையராஜா பயோபிக் மற்றும் இந்தி படம் என பல படங்களைக் கைவசம் வைத்துள்ள தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

தற்காலிகமாக ‘DD4’ என அழைக்கப்படும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் ராஜ்கிரண் நடிப்பது ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு ‘இட்லி கடை’ என்று பெயர் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஹோட்டல் பிஸ்னஸ் சம்மந்தப்பட்ட படமாக இந்த படத்தை தனுஷ் உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதில் தனுஷின் அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?... காத்திருந்த ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!

இந்தி பிளாக்பஸ்டர் ‘கில்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் #Karthi29 பிரம்மாண்ட துவக்கம்!

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments