தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வியாழன், 12 டிசம்பர் 2024 (11:26 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த படத்தைக் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7 அம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர். படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய்- சந்தீப் கிஷன் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

விஜய் சேதுபதி & மிஷ்கின் கூட்டணியின் நீண்ட நாள் தாமத ‘ட்ரெய்ன்’ ரிலீஸ் அப்டேட்!

திரிஷ்யம் மூன்றாம் பாகத்தை முதலில் பார்க்க அவர்கள்தான் தகுதியானவர்கள்… இயக்குனர் ஜீத்து ஜோசப் கருத்து!

வசூலில் மோசம். இணையத்தில் ட்ரோல்கள்.. ரவி தேஜாவின் ‘மாஸ் ஜாத்ரா’வுக்கு நேர்ந்த சோகம்!

ப்ரவீனை அடித்துப் போட்ட கம்ரூதின்! Red Card எவிக்‌ஷன் கன்பார்ம்! Biggboss வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments