Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் படத்தின் 3 வது சிங்கில் ரிலீஸ் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (21:25 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் 3 வது சிங்கில் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஜூன் 18 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை 17 மொழிகளில் டப் செய்து ஒரே நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளார்களாம். தனுஷ் இப்போது ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடிப்பதால் அவரை முன்னிறுத்தி இத்தனை மொழிகளில் டப் செய்ய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் தனிஷின் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள  3 வது சிங்கில் பாடல் விரைவில் வெளியாகும் என இப்படகுழுதெரிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான  ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி ஆகிய 2 பாடல்களும் ஹிட் ஆனதை அடுத்து இப்படாலுக்கும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments