Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் 'வடசென்னை' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (22:21 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை தயாரித்த நடிகர் தனுஷ் தற்போது 'வடசென்னை, 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிரைலர் ரிலீஸ் தேதியுடன் தனுஷின் வித்தியாசமான கெட்டப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,. வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்தை லைக்கா நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
 
மூன்று பாகங்களாக உருவாக்கப்படுவதாக கூறப்படும் 'வடசென்னை' படம் தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படம் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்ணப்பா படத்தில் பிரபாஸ் எவ்வளவு நேரம் வருவார்?... வெளியான தகவல்!

மும்பையில் மூன்று மாதங்கள் முகாமிடும் அட்லி& அல்லு அர்ஜுன் படக்குழு!

மீண்டும் இணையும் சிம்பு & வெங்கட் பிரபு கூட்டணி… சிம்பு 50 ஆவது படத்தில் நடக்கும் மாற்றம்!

ராம்சரணுக்குத் தோல்விப் படம் கொடுத்ததற்காக வருந்துகிறேன் – தில் ராஜு மனம் திறப்பு!

சல்மான் கானுக்கு அரிய வகை மூளை நோய்… ரசிகர்கள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments