தனுஷின் ‘பட்டாஸ்’ குறித்த அட்டகாசமான அப்டேட்!

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (20:36 IST)
தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் வரும் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பரவி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
மவனே..! என்ன மோதிட வாடா..
தனியா வரேன் நீ இப்ப வாடா..
வெறியாகுது..
வா இப்ப வாடா..!!
என்று தொடங்கும் இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments