Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் அடுத்த மூன்று திரைப்படங்களும் ஓடிடி ரிலீஸா?

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (11:49 IST)
தனுஷின் அடுத்த மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதும் ஆனால் கடந்த சில வாரங்களாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக டாக்டர், அண்ணாத்த மற்றும் மாநாடு ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களாகும். இந்த நிலையில் தனுஷின் அடுத்த மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான ’அட்ரேங்கி ரே’ மற்றும் ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன்’ ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் அதேபோல் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மாறன்’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தனுஷின் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் மற்றும் வெற்றிமாறன் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments