Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித், விஜய், சூர்யாவுடன் மோத தயாராகும் தனுஷ்

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (22:21 IST)
அஜித், விஜய், சூர்யா நடித்த படங்கள் தனித்தனியாக வெளியானாலே அந்த நாட்கள் திருவிழா போன்று இருக்கும். இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று அஜித்தின் விஸ்வாசம், விஜய்யின் சர்கார் மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதில் விஜய்யின் 'சர்கார்' இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே. இயக்குனர் செல்வராகவன் ஆகிய இருவருமே தங்கள் டுவிட்டர் பக்கங்களில் தீபாவளி ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் அஜித்தின் விஸ்வாசம் இயக்குனர் சிவா, ரிலீஸ் தேதி குறித்த தகவல்களை கூறவில்லை என்றாலும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய அனைத்து பணிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கவுதம்மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும் தீபாவளி போட்டியில் தற்போது இணைந்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாகவும், தனுஷ், சசிகுமார் இணைந்து நடிக்கும் காட்சிகள் மட்டுமே பெண்டிங் இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பும் விரைவில் முடிந்து வரும் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை உருவாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா லஷ்மி!

அந்த படத்தால் என்னைப் பள்ளியை விட்டு நின்றுவிட சொன்னார்கள்… ஊர்வசி பகிர்ந்த தகவல்!

லாரன்ஸ் மற்றும் அவர் சகோதரர் நடிப்பில் உருவாகும் புல்லட்… டீசர் எப்படி?

நஷ்டத்தை நோக்கி விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’… விற்பனை ஆகாத சேட்டிலைட் உரிமை!

அடுத்த கட்டுரையில்
Show comments