Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவிடம் மட்டும் ஸ்ட்ரிக்… வி ஜே சித்துவுக்கு இலவசமாகப் பாடலை கொடுத்த தனுஷ்!

vinoth
வியாழன், 17 ஜூலை 2025 (11:17 IST)
சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டிராகன் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை வேடத்தில் பிரபல யுடியூபர் வி ஜே சித்து நடித்திருந்தார். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதையடுத்து தற்போது அவர் கதாநாயகனாக ப்ரமோஷன் பெறுகிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கர,’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாவதோடு மட்டுமில்லாமல், அவரே அந்த படத்தை இயக்கியும் வருகிறார்.  இதற்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் அவரை வைத்து ப்ரோமோ ஷூட் ஒன்றை படக்குழு படமாக்கியது.

தற்போது படத்தின் ஷூட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சியில் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தலைப்பிசை பாடலை பயன்படுத்த படக்குழுவினர் விரும்பியுள்ளனர். இது சம்மந்தமாக தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனத்தை அணுக அவர்களுக்கு அந்த பாடலை இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ள தனுஷ் அனுமதி கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நயன்தாராவின் திருமண ஆவணப்பட்டதில் தன்னுடைய தயாரிப்புப் படமான ‘நானும் ரௌடிதான்’ படத்தின் சில காட்சிகள் மற்றும் இசையைப் பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்