Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய், அஜீத்தை ஃபாலோ செய்கிறாரா தனுஷ்?

விஜய், அஜீத்தை ஃபாலோ செய்கிறாரா தனுஷ்?
, வியாழன், 27 ஏப்ரல் 2017 (13:06 IST)
விஜய்யின் ‘விஜய் 61’, அஜீத்தின் ‘விவேகம்’ படங்களின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுவதால், தனுஷுக்கும் அந்த ஆசை வந்துள்ளதாம்.

 

 

பொதுவாக, பாடல் காட்சிகளை எடுக்கத்தான் வெளிநாடு போவது தமிழ் சினிமாவின் வழக்கம். ஆனால், இப்போது கதையே வெளிநாடுகளில் நடப்பது போல உருவாக்குவதால், பாதி படப்பிடிப்பு வெளிநாடுகளில்தான் நடக்கிறது. விஜய்யின் ‘விஜய் 61’ படப்பிடிப்பு, சென்னை மற்றும் ராஜஸ்தானைத் தொடர்ந்து தற்போது ஐரோப்பாவில் நடைபெறுகிறது. அதேபோல, அஜீத்தின் ‘விவேகம்’ படமும் பல்கேரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது.

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ கூட அமெரிக்காவில் நடப்பதாக வருகிறது. அவ்வளவு ஏன்… சந்தானம் படத்தின் க்ளைமாக்ஸைக் கூட போலந்தில் படமாக்கப் போகிறார்கள். எனவே, ஒரு வருடத்திற்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த கார்த்திக் சுப்பராஜ் படத்தை தூசி தட்டி எடுத்துள்ளார் தனுஷ். காரணம், பெரும்பாலான காட்சிகள் நியூயார்க்கில் நடைபெறுவதாக இருக்கிறதாம். கடந்த வருடம் செப்டம்பரில் ஷூட்டிங் போவதாகச் சொன்னவர்கள், இந்த வருடம் அக்டோபரில் ஷூட்டிங் தொடங்கும் என்கிறார்கள். இந்த வருடமாவது தொடங்குவார்களா?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சியான போட்டோவை வெளியிட்ட ராய் லட்சுமி