Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் போண்டாமணிக்கு பணஉதவி செய்த தனுஷ் !

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (16:17 IST)
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டாமணிக்கு  தனுஷ் பண உதவி செய்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரபல காமெடி நடிகர் போண்டாமணி. வடிவேலு குழுவினரோடு இணைந்து பல படங்களில் நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இவர் சமீபத்தில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்காக சிகிச்சை பெற்று வந்த  நிலையில், அவரது இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்து விட்டதாக  நடிகர் பெஞ்சமின் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
 

ALSO READ: நடிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்: நடிகர் வடிவேலு

இந்த  நிலையில், சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி, ஒரு பிரபல சேனலுக்குப் அவர்  பேட்டியளித்திருந்தார். அதில்,’’ ஒரு படத்தில்  நிஜ சாக்கடையில் குதித்ததால்தான்  முதலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு, அதன் பின் பல பிரச்சனைகளைச் சந்தித்ததாகவும்,தற்போது இரண்டு இரண்டு சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் சிரிக்க வைத்த எனக்கு இந்த  நிலைமை வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, நடிகர் வடிவேலு போண்டாமணிக்கு உதவி செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   போண்டாமணிக்கு  நடிகர் தனுஷ், ரூ.1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

இதற்கு, ஒரு வீடியோ வெளியிட்டு தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்  நடிகர் போண்டாமணி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments