மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்… இயக்குனர் பகிர்ந்த தகவல்!

Webdunia
சனி, 13 ஜனவரி 2024 (07:16 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இருப்பினும் தனுஷின் நடிப்பு மற்றும் ஜி வி பிரகாஷின் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்த அம்சங்களாக அமைந்துள்ளன. இந்நிலையில் படம் சம்மந்தமாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்” என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.

தனுஷ் ஏற்கனவே பகீர் என்ற ஐரோப்பிய படத்திலும் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் தமிழ் தவிர்த்து இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments