Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் தனுஷ் யாருடைய மகன்?: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நடிகர் தனுஷ் யாருடைய மகன்?: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (10:49 IST)
நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என மதுரையை சேர்ந்த முருகேசன் மீனாட்சி தம்பதிகள் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து நடிகர் தனுஷுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.


 
 
தனுஷ் தன்னுடைய மகன் என்றும் அவரிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் தங்களுக்கு தேவையில்லை என்றும், அவர் தங்களது மகன் என்ற உரிமை மட்டும் போதும் என்றும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
 
இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டர். இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
 
இந்த வழக்கின் ஒரு பகுதியாக தனுஷூக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை மறுத்த தனுஷ் தரப்பு இந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரியிருந்தது.
 
இதனையடுத்து தனுஷின் கோரிக்கையை ஏற்று இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தை எடுத்துக்காட்டாகக் கூறி TTF வாசனை நக்கல் செய்த கோவை மாநகரக் காவல்துறை!

12 வருஷம் ஆனாலும் சிரிப்பு கியாரண்டி! பொங்கல் ரேஸ் வின்னரா ‘மதகஜராஜா’ - திரை விமர்சனம்!

சந்தானம் கோபித்துக் கொள்வார்… இருந்தாலும் சொல்கிறேன் – சுந்தர் சி வேண்டுகோள்!

ரஜினியின் பில்லா தோல்வி படமா? இயக்குனர் விஷ்ணுவர்தான் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!

ரேஸில் பெற்ற வெற்றிக்குப் பின்னர் ஷாலினிக்கு நன்றி சொன்ன அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments