Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரைலர் லோடிங்.. கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த தனுஷ்!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (09:58 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50 ஆவது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி கவனம் பெற்ற நிலையில் இப்போது படத்தின் டிரைலர் தயாராகி வருவதாக படத்தின் கதாநாயகன் தனுஷ் அறிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

நீச்சலுடை புகைப்படங்களை வெளியிட்ட பாபநாசம் புகழ் எஸ்தர் அனில்!

அடுத்த கட்டுரையில்
Show comments