Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் கேப்டன் மில்லர் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (16:25 IST)
தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படம் சம்மந்தமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். படம் ரிலீஸானதும் கேப்டன் மில்லர் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments