Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை நேரு ஸ்டேடியத்தில் கேப்டன் மில்லர் ஆடியோ வெளியீடு.. தேதி இதுதான்!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:00 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50 ஆவது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி கவனம் பெற்ற நிலையில் இப்போது படத்தின் டிரைலர் தயாராகி வருவதாக படத்தின் கதாநாயகன் தனுஷ் அறிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  இந்நிலையில் இப்போது ஜனவரி 3 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments