Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ்-வெற்றிமாறன் இணையும் பட டைட்டில் இதுதான்

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (15:52 IST)
தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி அவர் நடித்து முடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை' திரைப்படம் வெளியாகிய நிலையில் மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இணையும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது. 'அசுரன்' என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படம் 'வடசென்னை' படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும், இந்த படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமானது என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கே இந்த படம் வித்தியாசமான படம் என்பதை உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments