முதல் முறையாக இணையும் தனுஷ் & வடிவேலு.. மாரி செல்வராஜ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (07:43 IST)
தனுஷ் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படங்களைத் தயாரித்து வந்தார். மிகக்குறைந்த காலத்திலேயே இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 20 படங்களைத் தயாரித்திருந்தார். இதில் ரஜினியின் காலா படமும் அடக்கம். அவர் கடைசியாக தயாரித்த காலா திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பொருளாதார ரீதியாக நஷ்டமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் கடந்த சில வருடங்களாக வுண்டர்பார் நிறுவனம் இயங்கவே இல்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் வுண்டர்பார் பிலிம்ஸுக்கு தனுஷ் உயிர் கொடுக்க உள்ளார். இந்நிலையில் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் 15 ஆவது படமாக உருவாக உள்ள படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். சமீபத்தில் கர்ணன் படம் ரிலீஸாகி 2 ஆம் ஆண்டில் இந்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என சொல்லப்படும் நிலையில், இந்த படத்தில் வடிவேலுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை, தனுஷ் வடிவேலு கூட்டணி இணைந்து நடித்ததில்லை. படிக்காதவன் படத்தில் சில நாட்கள் வடிவேலு நடித்த நிலையில் பின்னர் அவர் அந்த படத்தில் இருந்து விலகி, விவேக் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments