அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

vinoth
ஞாயிறு, 9 மார்ச் 2025 (13:35 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.  இதையடுத்து அவர் இந்தி படம் உள்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷ், அஜித்தை சந்தித்து அவரை வைத்து இயக்க தான் ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், அந்த கதையைக் கேட்டு அஜித் நேர்மறையான பதிலை சொல்லியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை மற்ற எல்லா விஷயங்களும் சாதகமாக அமையும் பட்சத்தில் தனுஷ் –அஜித் கூட்டணியில் ஒரு படம் உருவாகலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை வெறும் வதந்தி என மறுத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன். இதுபற்றி அவர் பேசுகையில் “அஜித்திடம் கதை சொல்லிவிட்டு பல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். அதே போல தனுஷும் கையில் ஐந்து படங்களுக்கு மேல் வைத்துள்ளார். அதனால் அவர்கள் இணைந்து படம் பண்ண வாய்ப்பே இல்லை. எனக்கு தெரிந்து அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக்தான் இயக்குவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments