Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்கி 2898 AD படத்துக்கும் கங்குவாவுக்கும் உள்ள ஒற்றுமை.. தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்த அப்டேட்!

vinoth
வியாழன், 4 ஜூலை 2024 (16:46 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான தனஞ்செயன் படம் பற்றி பேசும்போது “முதல் முறையாக இந்த படத்தை பல மொழிகளில் கொண்டு செல்கிறோம். தியேட்டரை விட ஓடிடியில் அதிக மொழிகளில் ரிலீஸ் ஆகும். கல்கி படத்தில் எப்படி பார்வையாளர்களைக் கவரும் மிரட்டலான விஷுவல் காட்சிகள் இடம்பெற்றனவோ, அப்படி கங்குவா படத்திலும் மிரட்டலான விஷுவல்கள் உள்ளன.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments