Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்ட படத்தின் ஒட்டுமொத்த வசூலை ‘கோட்’ படம் ஒரே நாளில் முந்திவிட்டது… தயாரிப்பாளர் தனஞ்செயன்!

vinoth
சனி, 7 செப்டம்பர் 2024 (08:37 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

நேற்று முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கும் நிலையில் கேரளா, ஆந்திரா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபப்ட்டுள்ளது. ஆனால் லியோ திரைப்படம் முதல் நாளில் 148 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது “கோட் படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய். ரஜினி சாரின் பேட்ட படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாடு வசூலே 126 கோடி ரூபாய்தான். பேட்ட படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ஒரே நாளில் கோட் தாண்டியுள்ளது. ஒரு விடுமுறையில்லாத நாளில் ஒரு படம் இவ்வளவு வசூலிப்பது விஜய் சாரின் வெற்றி என்றுதான் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments