முதல்முறையாக பிரபல இசையமைப்பாளருடன் கைகோர்க்கும் லிங்குசாமி!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (19:44 IST)
முதல்முறையாக பிரபல இசையமைப்பாளருடன் கைகோர்க்கும் லிங்குசாமி!
பிரபல இயக்குனர் லிங்குசாமி முதல் முறையாக தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார் என்றும் அவர் இயக்க இருக்கும் படத்தில் ராம்பொதானி ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது முதல்முறையாக தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்துடன் லிங்குசாமி இணைகிறார். லிங்குசாமி இயக்கும் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பாளர் என சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் லிங்குசாமியுடன் தேவிஸ்ரீபிரசாத் இணைந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி முதல் முறையாக தெலுங்கு திரைப்படத்தை இயக்க இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் வெற்றி படமாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இவ்வருட இறுதியில் இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments