Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதம் - அஜீத் படத்தில் நடிக்கும் தேவி அஜீத்

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2014 (11:02 IST)
மலையாளத்தின் பிரபல நடிகை தேவி அஜீத் கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தத் தகவலை தேவி அஜீத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கௌதம் - அஜீத் இணையும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்த கௌதம் தற்போது த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார். இதுவொரு க்ரைம் த்ரில்லர் என கூறப்படுகிறது. 
 

இதில் புதிதாக தேவி அஜீத்தும் இணைந்துள்ளார். தேவி அஜீத் மலையாள தொலைக்காட்சி தொடர்கள், குறும்படங்கள், சினிமா என்று பல தளங்களில் பணியாற்றியவர். திடீரென ஒருநாள் அனைத்தையும் உதறிவிட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். ஏழு வருடங்கள் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர் சென்ற வருடம் வி.கே.பிரசாத்தின் ட்ரிவான்ட்ரம் லாட்ஜ் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரியானார். இந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர் அனூப் மேனன். பிரதான வேடத்தில் அவர் நடித்துமிருந்தார்.
அனூப் மேனன் கேட்டுக் கொண்டதால் ட்ரிவான்ட்ரம் லாட்ஜில் தேவி அஜீத் நடித்தார். அதன் பிறகு பல படங்கள். தமிழில் தாமரைகண்ணனின் சூறையாடல் படத்திலும் நடித்திருந்தார். தற்போது கௌதம் அவரை தனது படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
தேவி அஜீத் திறமையான நடிகை. அவருக்கு தனது படத்தில் கௌதம் முக்கியமான வேடம் தந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments