Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அவனுக்கு நான் அக்கா கிடையாது, அம்மா” – நகுல் குறித்து எமோஷனலாக பேசிய தேவயானி.

vinoth
திங்கள், 22 ஜூலை 2024 (07:50 IST)
ஷங்கரின் பாய்ஸ் படம் மூலமாக அறிமுகமான நடிகை தேவயாணியின் தம்பி நகுல். மீண்டும் காதலில் விழுந்தேன் திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைய சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் முன்னணி நடிகராக ஆக முடியவில்லை. இப்போது தனக்கான இடத்துக்காக அவர் போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல இருந்த ‘வாஸ்கோடகாமா’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தேவயானி கலந்துகொண்டு நகுலை வாழ்த்திப் பேசினார்.

அதில் ”நகுலை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாய்ஸ் படத்தில் இருந்து காதலில் விழுந்தேன் படத்தில் அவரின் நடிப்பு மாற்றம் என்னை வியக்க வைத்தது. அவர் ஒரு நல்ல கதை, இயக்குனருக்காகக் காத்திருக்கிறார். எல்லோருக்கும் ஒரு நேரம் வரும்.  அவர் நடன, இசை என எல்லா துறைகளிலும் பயிற்சி பெற்றவர்.  இன்று எங்கள் அப்பா அம்மா இல்லை. ஆனால் அவர்களின் ஆசி நகுலுக்குக் கட்டாயம் கிடைக்கும்.  நகுலுக்கு நான் அக்கா கிடையாது, அம்மா.” என்று பேச மேடையில் இருந்த நகுல் இதைக் கேட்டு கண்கலங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments