Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

vinoth
திங்கள், 2 டிசம்பர் 2024 (14:51 IST)
தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்ட இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா. 90 களில் ரஹ்மான் மிகப்பெரிய அளவில் கோலோச்சிக்கொண்டிருந்த போதும் தேவா தனக்கென ஒரு ரூட்டைப் போட்டுக்கொண்டு வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தார்.

90 களில் ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த் எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து உச்சத்தில் இருந்தார். ஆனால் காலம் செல்ல செல்ல அவரின் பல ஹிட் பாடல்கள் பிற மொழி பாடல்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இது சம்மந்தமாக அவரை ட்ரோல் செய்யும் பதிவுகளும் அவ்வப்போது வெளியாகின.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தேவா “என்னிடம் பாடல் கம்போஸிங் வரும்போதே இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் எதாவது ஒரு ஹிட் பாட்டை எடுத்துக் கொண்டு இதே போல வேண்டும் என்பார்கள். என்னால் அப்போது பிடிவாதமாக மறுக்க முடியாத சூழல். அதனால் நான் அவர்கள் கேட்டதை போட்டுக் கொடுத்துவிடுவேன். பிற்காலத்தில் யுடியூப் வாட்ஸ் ஆப் எல்லாம் வரும் என்று நான் நினைக்கவில்லை.” என ஜாலியாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

எம் ஜி ஆர் தமிழ் சினிமா கணிப்பு க்ளைமேக்ஸ் 10 நிமிஷத்துக்கு

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல் நடிகர்… கங்குவாவுக்குப் பின் மீண்டும் இணையும் கூட்டணி!

37 வயதில் ஓய்வை அறிவித்த இளம் நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments