Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருகிறது ஹிட் பேய்ப் படத்தின் இரண்டாம் பாகம்?

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (09:49 IST)
அருள்நிதி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற டிமாண்டி காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வர உள்ளது.

தமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிமாண்ட் உச்சத்தில் இருந்தபோது வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் தான் டிமாண்ட்டி காலணி. இந்த படத்தில் அருள்நிதி, சனத் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்த நிலையில் அறிமுக இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளாகவே படமாக்கி முடிக்கப்பட்டு வெளியான இந்த படம் நல்ல வசூலைக் குவித்தது.

இந்த படத்தின் வெற்றியால் இயக்குனர் அஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். இந்நிலையில் இப்போது டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்திலும் அருள்நிதியே நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு அஜய் ஞானமுத்து திரைக்கதை மட்டுமே எழுத உள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.  முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் சம்மந்தம் இருக்காது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் எவ்வளவு?

நாட்டுக்கு அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது: பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் வாழ்த்து..!

பிரேம்ஜி திருமணத்தை அடுத்து ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் மகள் திருமணம்: குவிந்த பிரபலங்கள்..!

பிதா திரைப்பட அறிவிப்பு விழா

உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள 'ஹரா' திரைப்படம்

அடுத்த கட்டுரையில்
Show comments