Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜனநாயகன்’ படத்தை வாங்க ஆளில்லையா? வாங்குவதற்கு போட்டியா? இன்னும் வியாபாரம் ஆகவில்லை

Siva
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (11:48 IST)
பொதுவாக விஜய் நடிக்கும் படம் என்றால், பூஜை போட்ட அன்றே கிட்டத்தட்ட அனைத்து வியாபாரமும் ஆகிவிடும் என்ற நிலையில், ’ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிய போகும் சமயத்தில் கூட, இன்னும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை வியாபாரம் முடியவில்லை என்று கூறப்படுகிறது.
 
தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில ரிலீஸ் உரிமைகளை பிரபல விநியோகிஸ்தர் ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு கேட்டதாகவும், ஆனால் தயாரிப்பு தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
"தமிழக ரிலீஸ் உரிமை மட்டுமே 100 கோடி," என்று தயாரிப்பு தரப்பு கூறிவரும் இல்லையே, இந்த படத்தை வாங்க கலைபுலி தாணு, ஏ.ஜி.எஸ் நிறுவனம் உள்பட நான்கு முன்னணி நிறுவனங்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
 
இருப்பினும், இன்னும் இந்த வியாபாரம் முடியாததற்கு ஒரே காரணம், இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாக உள்ளது என்பதும், அதற்கு மூன்று மாதங்களுக்கு பின்னால் தேர்தல் வருவதால், ஆளுங்கட்சிக்கு எதிரான காட்சிகள் இதில்  இருந்தால், ஆளுங்கட்சியின் கோபத்திற்கு உள்ளாக வேண்டும் என்ற தயக்கம் கூட காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
 
இருப்பினும், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் முடிவடைந்த நிலையில், விரைவில் தமிழக ரிலீஸ் உரிமை வியாபாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி.. போலீஸ் வந்ததும் தெறித்து ஓடிய அஜித் பட நடிகர்!

வரதட்சணை வாங்கி திருமணம் செய்தேனா? ரம்யா பாண்டியன் விளக்க வீடியோ..!

நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!

’தக்லைஃப்’ படத்தில் சிம்பு தான் ஹீரோ.. கமல் சிறப்பு தோற்றம் தான்.. பிரபலம் கூறிய தகவல்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments