குடியிருப்பு தீ விபத்து குறித்து தீபிகா படுகோனே!

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (17:33 IST)
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியதாக கூறப்பட்ட தீபிகா படுகோனே பாதுகாப்பாக இருப்பாதாக தெரிவித்துள்ளார்.
 
மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள சொகுசு வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பியூமவுண்ட். இங்கு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சொந்தமாக வீடு வாங்கி வசித்து வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 33 மாடிகள் உள்ளன. 
 
இந்த குடியிருப்பின் மேல் பகுதியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு வீர்ர்கள் உடனடியாக அங்கு விரைந்து அக்குடியிருப்பில் வசிக்கும் 90 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு தீயை அணைக்கு பணிகள் நடந்து வருகிறது. இந்த தீ விபத்தில் தீபிகா படுகோனே சிக்கியிருப்பாரா? என அவரது ரசிகர்கள் கவலை அடைந்து வந்தனர்.
 
இந்நிலையில், தீபிகா படுகோனே தீ விபத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
 
“ நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி. தங்களது உயிரை பணயம் வைத்து போராடி வரும் தீயணைப்பு வீரர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம் “ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments