Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்பார் விநியோகிஸ்தர்கள் பாரதிராஜாவுடன் சந்திப்பு: பின்னணி என்ன?

ரஜினி
Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (17:03 IST)
தர்பார் விநியோகிஸ்தர்கள் பாரதிராஜாவுடன் சந்திப்பு:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டம் என ஒரு சில விநியோகஸ்தர்கள் நேற்று முன்தினம் திடீரென ரஜினி வீட்டு முன் கூடி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று இயக்குனர் பாரதிராஜா அவர்கள் ரஜினியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தார். இந்த நிலையில் இன்று ரஜினி வீட்டு முன் போராட்டம் நடத்திய விநியோகிஸ்தர்கள் பாரதிராஜாவை சந்தித்துள்ளனர்
 
இந்த மூன்று நிகழ்வுகளில் வைத்து தர்பார் படம் நஷ்டம் என விநியோகிஸ்தர்களை போராட்டம் செய்ய தூண்டியதே பாரதிராஜா தான் என  ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சுமத்தி வருகின்றனர். தற்போது திடீரென பாரதிராஜா, ரஜினி மீது விமர்சனம் வைப்பதற்கு என்ன காரணம் என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்
 
ஏற்கனவே ’தர்பார்’ விநியோகஸ்தர்கள் போராட்டம், பாரதிராஜாவின் ரஜினி எதிர்ப்பு குரல் ஆகியவைகளுக்கு பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது விநியோகஸ்தர்கள் போராட்டத்திற்கு பாரதிராஜா தான் காரணம் என ரஜினி ரசிகர்கள் குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

இயக்குனர் ஹரி & பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் படம்… 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

டிரைலருக்கு நடுவுல Reference இல்ல.. Reference நடுவுலதான் டிரைலரே… எப்படி இருக்கு GBU டிரைலர்?

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments