இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

Bala
வியாழன், 13 நவம்பர் 2025 (19:55 IST)
தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.  துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அந்தப் படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்த அபிநய் மறைந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்தப் படத்தில் இருவரும் ஒரே நேரத்தில் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
நடிகராக ஆவதற்கு முன் தனுஷ் ஒரு சமையல் நிபுணராக ஆசைப்பட்டதாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்தார். கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்கு சமீபத்தில்தான் விவாகரத்து ஏற்பட்டது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தாலும் சினிமா என வரும் போது எல்லாவற்றையும் மறந்து நடிப்பின் மீது கவனம் செலுத்தி வருகிறார்.
 
தமிழ், ஹிந்தி, பாலிவுட் என எல்லா மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார் தனுஷ். தற்போது விக்னேஷ் ராஜா இயக்கும் டி54 படத்தில் நடித்து வரும் தனுஷ் தனது பாலிவுட் படமான தேரே இஸ்க் மெய்ன் படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்காக நேற்று முன் தினம் மும்பை சென்றார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. செம ஸ்டைலிஷாக அவர் காணப்பட்டார்.
 
அந்தப் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்தப் படத்தின் ஒரு போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் பற்றிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் தனுஷ். அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரிட்டி சனோன் நடித்துள்ளார். அந்த போஸ்டரில் தனுஷும் கிரிட்டி சனோனும் நெருக்கமாக ஒருவருக்கொருவர் பார்த்தவாறு போஸ் கொடுத்துள்ளனர்.

 
 
பாலிவுட் படம் என்றாலே கெமிஸ்ட்ரிக்கு பஞ்சமிருக்காது. தமிழில் அந்தளவு இருக்காது. அதனால் ஹிந்தியில் பொளந்து கட்டுறாரு தனுஷ் என இந்த போஸ்டரை பார்த்த பிறகு நெட்டிசன்கள் கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments