Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த பாட்டில் இளையராஜாவுக்கு உரிமையில்லை… டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

vinoth
சனி, 1 பிப்ரவரி 2025 (07:50 IST)
தற்போது ஜீவா, அர்ஜூன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் பாடல் ஆசிரியர் பா விஜய் இயக்கத்தில் அகத்தியா என்ற படம் உருவாகி வருகிறது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷன் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா,  இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடலான “என் இனிய பொன்நிலாவே” பாடலை ரிக்ரியேட் செய்துள்ளார். அந்த பாடல் சமீபத்தில் வெளியானது. மூடுபனி படத்தில் இளையராஜா இசையில் உருவான அந்த பாடல் இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பாடலாக உள்ளது. இந்த பாடலுக்கான உரிமையை இளையராஜாவிடம் இருந்து படக்குழு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக ‘சரிகம’ நிறுவனம் இந்த பாடலின் உரிமை தங்களிடம் உள்ளது என்று கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘அந்த பாடலின் காப்பிரைட் உரிமை இளையராஜாவிடம் இல்லை’ எனத் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் 30 லட்ச ரூபாய் செலுத்தி அந்த பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நீங்களும் உங்கள் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள்… ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments