Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு மூளையில்லை என்று நினைக்கிறீர்களா?... ஆதிபுருஷ் படக்குழுவினரை கண்டித்த நீதிமன்றம்.!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (07:37 IST)
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். ஓம் ராவத் இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் இந்த படம் எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அனுமன் மற்றும் சீதை ஆகியோரை சித்தரித்துள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தபோது நீதிமன்றம் படக்குழுவினரைக் கண்டித்துள்ளது.

அதில் “படத்துக்கு அனுமதி அளித்த தணிக்கை வாரியம் என்ன செய்து கொண்டிருந்தது. எதிர்கால சந்ததியினருக்கு என்ன மாதிரியான கருத்தை தணிக்கை வாரியம் சொல்ல விரும்புகிறது.

அனுமனையும் சீதையையும் சித்தரித்த விதம் வேதனையாக உள்ளது. சர்ச்சைகுரிய வசனங்கள் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் காட்சிகளை என்ன செய்வீர்கள். பல சர்ச்சைகள் இருக்கும் நிலையில் பொறுப்பு துறப்பு வெளியிட்டு இருக்கிறோம் என படக்குழு சொல்கிறது. இது ராமாயனமே இல்லை என்று சொல்வீர்கள், அதை பார்க்கும் என்ன மூளையற்றவர்களா” எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments