Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிம்பு

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிம்பு
, வெள்ளி, 27 மார்ச் 2015 (14:01 IST)
பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணம் கிருத்திகா உதயநிதி. வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனரான இவர் அடுத்தப் படத்தில் சிம்புவை இயக்குகிறார்.
 

 
சிவா, ப்ரியா ஆனந்த் நடித்த வணக்கம் சென்னை கிருத்திகாவுக்கு தொழில் தெரியவில்லை என்பதை வெளிச்சமிட்டு காட்டியது. அதற்கெல்லாம் அவர் அஞ்சக் கூடியவரா? இரண்டாவது படத்துக்கு அவர் தயாராகிவிட்டார்.
 
இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிப்பதாக தகவல். இசை, வணக்கம் சென்னைக்கு இசையமைத்த அதே அனிருத். விரைவில் படம் குறித்த அனைத்து தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil