Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி இயக்குநருக்கு கொரொனா தொற்று உறுதி !

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (22:15 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனாவால் மக்களின் வாழ்வாதரமும் பல தொழில்துறையும் முடங்கியுள்ளன.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பிரபல நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பதிவிட்டும் ரசிகர்களும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விஷால் உள்ளிட்ட பலர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் குணமாகி வீட்டுக்குத் திரும்பினர்.

இந்நிலையில் தற்போது,  பாகுபலி மூகம் உலகையே இந்திய சினிமாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ராஜமௌலிக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. எனவே நாங்கள் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவு வந்தது,அதில் எங்களுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது.

மருத்துவரின் அறிவுரைப் படி நாங்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறோம். கொரொனா தொற்று சரியானதும்  நாங்கள் பிளாஸ்மா செய்யவுள்ளோம் என கூறியுள்ளோம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல க்யூட் லுக்கில் கலக்கும் தமன்னா!

விஜய் மகன் என்று சொல்லாதீர்கள்… ஜேசன் சஞ்சய்… பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதில் அளித்த நடிகர்!

அந்த மாதிரி ஜோதிகா நடித்துள்ளாரா?.. இந்தி சீரிஸ் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி!

எக்ஸ் தளத்தில் சிலர் என்னை ஏமாற்றி இருக்கலாம்… ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல்!

விஷாலின் சம்பளப் பிரச்சனையால் கைவிடப்பட்டதா சுந்தர் சி படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments