Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி பட தயாரிப்பாளருக்கு கொரோனா உறுதி… ரசிகர்கள் அதிர்ச்சி…

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (15:30 IST)
இந்நிலையில் பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஜே.சதீஸ்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 கோடிக்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஐந்தாவது கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று ஆரம்ப காலத்தை விட பரவல் மற்றும் இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. அதேசமயம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஜே.சதீஸ்குமாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்,  தனது கேஎஸ்கே என்ற நிறுவனம் சார்பில் பல திரைப்படங்களை விநியோகித்துள்ளார்.

பின்னர்,  தரமணி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , நடுவில் கொஞ்சம்பக்கத்த காணோம், தங்க மீன்கள், அண்டாவ காணோம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து முன்னணி தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது விஜய் ஆண்டனியுடன்  அக்னிச் சிறகுகள் என்ற படத்திலும் நடித்து வருகிறார்…இவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments