தமிழ் சினிமா வியாபாரத்தில் உச்சம் தொடும் ரஜினிகாந்தின் ‘கூலி’!

vinoth
செவ்வாய், 17 ஜூன் 2025 (09:54 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார். தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர்.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. கூலி படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பர்ப்பு நிலவுகிறது.

கூலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு வியாபார உரிமை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை எந்தவொரு தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை சுமார் 80 கோடி ரூபாய்க்கு விலைபோக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு தொகைக் கொடுத்து வாங்கினால் வெளிநாடுகளில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலித்தால்தான் விநியோகஸ்தரால் இலாபம் பார்க்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments