புகழ் ஹீரோவாக நடிக்கும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படத்தின் டிரைலர்!

vinoth
திங்கள், 15 ஜனவரி 2024 (07:17 IST)
விஜய் டிவியில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக புகழ் கலக்கி வருகிறார். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ (Mr Zoo Keeper) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரே கட்டமாக பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டனர் படக்குழுவினர். அதையடுத்து பிலிப்பைன்ஸில் படப்பிடிப்பு நடந்தது.

இயக்குனர் சுரேஷ் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதாக  கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். ஆனால் சில பல காரணங்களால படம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது பொங்கலை முன்னிட்டு படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

ஆன்லைன் பந்தய விளம்பரம்: நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் CID விசாரணை!

ப்ரோ கோட் டைட்டிலுக்கான தடையை நீக்க முடியாது.. டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments