Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக் வித் கோமாளி புகழின் திருமண தேதி இதுதானா? வெளியான தகவல்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (15:44 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் புகழ் தற்போது நகைச்சுவை வேடங்களிலும் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக புகழ் கலக்கி வருகிறார். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ (Mr Zoo Keeper) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரே கட்டமாக பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டனர் படக்குழுவினர். அதையடுத்து பிலிப்பைன்ஸில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இயக்குனர் சுரேஷ் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் படக்குழுவினரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் புகழ், தற்போது தன்னுடைய காதலியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களின் திருமணம் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்தசாமி பிறந்த நாளில் நன்றி கூறிய நடிகர் சூர்யா..! வைரல் போஸ்டர்..!

கடற்கரையில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

மகிழ் திருமேனியோடு மோதலா… விடாமுயற்சி ஷூட்டிங்கை சென்னைக்கு மாற்ற சொன்ன அஜித்?

இன்று வெளியாகிறது சூர்யாவின் பாலிவுட் பட டிரைலர்!

புஷ்பா 2 தள்ளிவைப்பால் அஜித் பட ரிலீஸ் தேதி மாறுமா? ரசிகர்கள் சந்தேகம்!

அடுத்த கட்டுரையில்