Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீசாரை செருப்பு காலால் தள்ளிய மோகன் லால்.! கொந்தளிக்கும் போலீசார்!

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (12:47 IST)
மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் லால் தமிழிலும் இருவர், ஜில்லா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை தக்கவைத்து கொண்டார். 
 

 
சமீபத்தில் மோகன்லால், பிருதிவிராஜ், மஞ்சுவாரியர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த மலையாள படம் லூசிபர். இந்த படத்தை பிருதிவிராஜ் இயக்கியிருந்தார். இப்படம் கேரளாவில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
 
மேலும் தமிழகத்திலும் பல தியேட்டர்களில் திரையிட்டுள்ள இப்படத்தில் மோகன்லால் சண்டை காட்சிகளில் அதிரடியாக வெளுத்து வங்கியிருப்பர். அப்போது ஒருகாட்சியில் மோகன்லால் செருப்பு அணிந்த காலுடன் போலீஸ் மார்பில் மிதிப்பது போன்ற சர்ச்சை காட்சி படத்தில் இடப்பெற்றுள்ளது. இந்த காட்சியை  சுவரொட்டிகளாக அச்சிட்டும் கேரளாவில் ஒட்டி உள்ளனர்.  

இந்நிலையில் தற்போது, போலீசாரை செருப்பு காலால் உதைத்ததற்காக கேரள போலீஸ் சங்கம் கண்டனம் தெரிவித்து முதல்-மந்திரியிடம் புகார் அளித்துள்ளது. போலீசாரின் இந்த புகாரை பலரும் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்ஸ்கள் கேலி செய்து வருகிறார்கள். படத்தை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பாருங்கள் எனவும் சிலர் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments