Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோல்விக்கு காரணம்... ரஜினி நண்பரை கைகாட்டும் நடிகை

தோல்விக்கு காரணம்... ரஜினி நண்பரை கைகாட்டும் நடிகை
, செவ்வாய், 27 மே 2014 (17:11 IST)
என்னுடைய தோல்விக்கு காரணம் நடிகர் அம்பரீஷ் என்று ரஜினியின் நெருங்கிய நண்பரும் கர்நாடகா காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார் நடிகை திவ்யா ஸ்பந்தனா.
கர்நாடகாவின் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திவ்யா அங்கு வெற்றி பெற்றார். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக மத சார்பற்ற ஜனதாதளம் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியினரே என்னை தோற்கடித்துவிட்டனர் என்று திவ்யா குற்றஞ்சாட்டியதோடு, கர்நாடகா காங்கிரஸின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான நடிகர் அம்பரீஷே எனது தோல்விக்கு காரணம் என பகிரங்கமாக கூறினார். இது குறித்து அவர் ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
 
நடிகர் அம்பரீஷ் ரஜினியின் நெருங்கிய நண்பர். லிங்கா படத்தின் பூஜையின் போது அம்பரீஷ் தனது மனைவி சுமலதாவுடன் கலந்து கொண்டார். ரஜினிக்கு கர்நாடகாவில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தந்தவரும் அவரே.
 
அம்பரீஷுக்கும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் பகை இருந்து வந்தது. எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்திதான் திவ்யா ஸ்பந்தனா. அதன் காரணமாகவே திவ்யாவை வேண்டுமென்றே அம்ரீஷ் தோற்கடித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil