Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (18:03 IST)
உலகெங்கும் உள்ள நடிகர் நடிகைகள் உள்பட திரை நட்சத்திரங்கள் பலரும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் உள்ளனர் என்பதும் அவர்கள் ரசிகர்களுடன் நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு இந்த சமூக வலைத்தளங்கள் பெரும் உதவியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர் என்பதும் அவற்றின் மூலம் அவர்கள் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்து வரும் நடிகர் செந்தில் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கி அதில் கூறியிருப்பதாவது:
 
நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பி உடன் இணைந்து ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்தேன். கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோஷம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசைப்பட்டேன். எனவே தான் தற்போது ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன். அனைவரின் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றி’ என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார் 
 
செந்திலின் டுவிட்டர் கணக்கில் ஃபாலோயர்கள் மிக வேகமாக அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏகே ஒரு ரெட் டிராகன்.. அட்டகாசமாக வெளியானதுஅஜித்தின் குட் பேட் அக்லி டீசர்..

கணவரை விவாகரத்து செய்தார் பிக்பாஸ் நடிகை.. இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு..!

கௌரி கிஷனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

வித்தியாசமான ஆடை ஆபரணம் அணிந்து போஸ் கொடுத்த மாளவிகா!

பிரபல ஓடிடியில் வெளியானது சுழல் 2 வெப் சீரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments