Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்பார் ஷூட்டிங்கில் கற்கள் வீசி ரகளை செய்த மாணவர்கள்!

Webdunia
வியாழன், 2 மே 2019 (12:49 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடித்துவருகிறார். இது ரஜினியின் கேரியரில் 166 வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.


 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்க்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையிலுள்ள பிரபலமான கல்லூரி வளாகத்தில் படுமும்முரமாக  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பை பார்க்க சென்றுள்ளனர் ஆனால் தர்பார் படக்குழுவினர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 


 
இதனால் படக்குழுவினருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால். மாணவர்கள் கல்லூரியின் மாடிக்கு சென்று படப்பிடிப்பு தளத்தை நோக்கி கற்கள் வீசியதாக சொல்லப்படுக்கிறது. எனவே இதுகுறித்து தர்பார் படக்குழு கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments