Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலகலப்பு 2 படத்தின் வசூல் நிலவரம்

Webdunia
சனி, 10 பிப்ரவரி 2018 (11:05 IST)
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. இப்படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா நடித்துள்ளனர்.
இப்படத்தில் மிர்ச்சி சிவா, வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை நந்திதா கெஸ்ட் ரோலில்  நடித்துள்ளாராம். ‘ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழா   இசையமைத்துள்ளார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
கலகலப்பு முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்று இரண்டாவது பாகம் வெளிவந்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி வெளியான கலகலப்பு 2 முதல் நாள்  ஓரளவிற்கு நல்ல ஓப்பனிங் இருந்துள்ளது, இப்படம் சென்னையில் மட்டுமே ரூ. 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தமிழகம்  முழுவதும் எப்படியும் ரூ 3 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என தெரிகின்றது.

தொடர்புடைய செய்திகள்

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா… சூப்பர் ஸ்டாரோடு மீண்டும் கூட்டணி!

முன்பகையை மறந்து ஒரே மேடையில் கமல்ஹாசன் & தாணு!

அடுத்த கட்டுரையில்
Show comments