Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சக்கட்டத்தில் தனுஷ்- விஷால் பனிபோர் !

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (07:56 IST)
தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியின்றி தனது மாரி 2 படத்தை ரிலிஸ் செய்யவுள்ள தனுஷுக்கும் விஷாலுக்கும் இடையே பணிப்போர் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவதற்காக விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பட வெளியீட்டினை ஒழுங்குபடுத்துவதற்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தால் அமைக்கப்பட்ட கமிட்டியும் ஒன்று. அந்த கமிட்டியின் வேலை சென்சார் முடிந்து ரிலிஸுக்குக் காத்திருக்கும் படங்களை முறையாக வரிசைப் படுத்தி வெளியீட்டுத் தேதியை அறிவிப்பது. இந்த கமிட்டியின் ஒப்புதல் இன்றி எந்த படங்களும் ரிலிஸாகக் கூடாது எனக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் ரிலிஸுக்கு திட்டம் வகுத்திருந்த தனுஷின் மாரி 2 திரைப்படம் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையான டிசம்பர் 21 ஆம் தேதி தனது படத்தை ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளது. அதையொட்டி படத்தின் டிரைலரும் நாளை வெளியாக இருக்கிறது. ஜனவரியில் ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாவதால் தியேட்டர் கிடைக்காது என்ற காரணத்தால் இந்த திடீர் முடிவு எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முடிவால் ஜெயம் ரவியின் அடங்கமறு, விஜய் சேதுபதியின் சீதக்காதி மற்றும் சிவகார்த்திக்கேயன் தயாரித்துள்ள கனா திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் கடுப்பான தயாரிப்பாளர்கள் இதுபற்றி விஷாலிடம் முறையிட்டுள்ளதாகவும் அது சம்மந்த கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில்  இந்த பிரச்சனைக்கான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.

ஏற்கனவே இதுபோல அனுமதியின்றி தனது படமான திமிரு புடிச்சவன் படத்தை ரிலிஸ் செய்த விஜய் ஆண்டனியின் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்து அவரது படத்திற்கு ரெட்கார்டு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல இப்போது தனுஷுக்கும் ரெட் போடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தனுஷின் பின்புலம் மிகவும் பலம் வாய்ந்தது என்பதால் விஷால் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments