Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடி இருந்தால் தான் பார்க்க முடியும்: ஓவராக ரூல்ஸ் போடும் ஸ்டார் நடிகர்!!

Webdunia
ஞாயிறு, 14 மே 2017 (11:57 IST)
நடிகர் ரஜினிகாந்த் வருடத்துக்கு ஒருமுறை ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த சந்திப்பு நடைபெறவில்லை.


 
 
இந்நிலையில் 2.O படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட ரசிகர்கள் சந்திப்பு நின்று போனதால் நாளை ரசிகர்களை சந்திக்கவுள்ளார் ரஜினி.
 
முதல் கட்டமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சை, கரூர் ஆகிய 10 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கிறார்.
 
இந்த சந்திப்பு, கோடம்பாக்கம் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. நாளை முதல் 19 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இது தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

சர்ச்சைக்குரிய பாடலை நீக்கிய சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படக்குழு!

ஓடிடி தளத்தில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’…!

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments