Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெரினா புரட்சி' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியது சிங்கப்பூர்! அதிகாரிகள் சொன்ன சூப்பர் தகவல்

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (12:36 IST)
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் மெரினாவில் தன்னெழுச்சியாக தமிழக மக்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்தினர். 



இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடையை அகற்ற வேண்டும் என ஒட்டுமொத்த தமிழர்களும்   போராடினார்கள். மொத்த தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து போராடியதை பார்த்த மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு மசோதா சட்டமாக்கபட்டு அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் குடியரசு தலைவர்ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர் ஜல்லிக்கட்டு தடை நீங்கியது. 8  நாட்கள் நடந்த இந்த போராட்டம் உலக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  இந்த மெரினா புரட்சி படமாக்கப்பட்டது.
 
இந்த  திரைப்படத்திற்கு 80 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை.
 
காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளனர்.
படத்தை தயாரித்து வரும் நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
 
மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியிருக்கிறது.  
 
இந்த சூழ்நிலையில் சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியிருக்கிறது. சிங்கப்பூர் அரசின் தணிக்கை பிரிவான Info communications Media Devolpment Authorities மெரினா புரட்சி திரைப்படத்திற்கு NC 16 என்ற பிரிவின் கீழ் ” தமிழகளின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments