Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படம் புலி - நட்டி பரவசம்

ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படம் புலி - நட்டி பரவசம்
, திங்கள், 9 மார்ச் 2015 (10:04 IST)
விஜய் நடித்து வரும் புலி படத்துக்கு நட்டி ஒளிப்பதிவு செய்து வருகிறார். நட்டியின் முழுப்பெயர் நட்ராஜ். இந்திப் படவுலகில் உள்ளவர்களுக்கு நட்ராஜ் என்றழைப்பது சிரமமாக இருக்க, அவர்களால் எடிட் செய்யப்பட்ட பெயர்தான் நட்டி.
 
இந்தியின் பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கும் நட்டி, அவ்வப்போது தாய் மொழியான தமிழில் படங்கள் நடிப்பதுண்டு. அவரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த படம், சதுரங்க வேட்டை. அதையடுத்து புலி படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
 
சரி, புலி எப்படி வந்திருக்கிறது.
 
"நான் புலி படத்தின் எந்த விஷயத்தையும் சொல்லக் கூடாத கட்டாயத்தில் இருக்கிறேன். தயாரிப்பாளரும், இயக்குனரும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் படத்தைப் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வேன். ஆனால் நிச்சயம் இப்படம் ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படமாகவும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும்" என்றார் பட்டும் படாமலும்.
 
13 வருடங்களுக்கு முன் விஜய்யின் யூத் படத்துக்கு நட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இது அவர் ஒளிப்பதிவு செய்யும் இரண்டாவது விஜய் படம்.

Share this Story:

Follow Webdunia tamil