Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் விருதை வென்ற முதல் அயர்லாந்து நடிகர் எனும் பெருமையைப் பெற்ற சில்லியன் மர்ஃபி!

vinoth
திங்கள், 11 மார்ச் 2024 (10:45 IST)
இன்று நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் அதிகபட்சமாக ஏழு பிரிவுகளில் விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பஞ்ஹெய்மர் திரைப்படம். சிறந்த இயக்குனர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சில்லியன் மர்ஃபி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டௌனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவு ( ஹோய்டே வான் ஹோய்டோமா), சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒரிஜினல் இசைஆகிய பிரிவுகளில் இதுவரை விருதை வென்றுள்ளது.

இந்த படத்தில் ஓப்பன்ஹெய்மர் என்ற அனு விஞ்ஞானி வேடத்தில் நடித்த சில்லியன் மர்ஃபி சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். இதன் மூலம் முதல் முதலாக ஆஸ்கர் விருதை வென்ற அயர்லாந்து நாட்டுக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அவர். அயர்லாந்தில் பிறந்த சில்லியன் மர்ஃபி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இதற்கு முன்னர் அயர்லாந்தைச் சேர்ந்த இருவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள் என்ற போதும், அவர்கள் வேறு நாட்டில் பிறந்து வளர்ந்து அயர்லாந்துக்கு குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் டிவியில் புதிய சீரியல்.. பழைய சீரியல்களின் நேரம் மாற்றம்..!

ஓவர் பில்டப் வேண்டாம்.. ‘கங்குவா’ பிளாப் பயத்தால் அடக்கி வாசிக்கும் சூர்யா..!

அஞ்சான் படத்துக்குப் பின் ரெட்ரோவில் மீண்டும் பாடகர் ஆன சூர்யா… !

உலகளவில் 200 கோடி வசூலைக் குவித்த ‘குட் பேட் அக்லி’…!

பூஜா ஹெக்டே இதற்கு முன் அப்படி நடித்ததில்லை… அந்த ஒரு காட்சிதான் – ரெட்ரோ சீக்ரெட் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments