Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியுடன் கபாலி படம் பார்த்த சோ : வீடியோ

ரஜினியுடன் கபாலி படம் பார்த்த சோ : வீடியோ
, புதன், 27 ஜூலை 2016 (13:48 IST)
நடிகர் ரஜினிகாந்துடன் நடிகரும், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி சென்னையில் கபாலி படம் பார்த்த வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கபாலி. இந்த படம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஒருபக்கம் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், வாசூலில் இப்படம் சாதனை படைத்துள்ளது.
 
இந்நிலையில், ரஜினியின் நீண்ட கால நண்பரும், துக்ளக் ஆசிரியருமான சோ வுக்காக கபாலி படத்தின் சிறப்பு காட்சி சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள ஃபோர்பிரேம் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்படிருந்தது. 
 
சோ ராமசாமிக்கு கபாலியை திரையிட்டதோடு, அவரது அருகில் அமர்ந்து படத்தைப் பார்த்தார் ரஜினி. இந்த திரையிடலின் போது தயாரிப்பாளர் தாணுவும் உடனிருந்தார். 
 
படத்தைப் பார்த்த சோ ராமசாமி, ரஜினியை வேறொரு கோணத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார் சுருக்கமாக. அத்துடன் படம் நல்லாயிருப்பதாக படக்குழுவினரையும் பாராட்டினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'சேல்' ஆகலை... சொந்தமாக படத்தை வெளியிடும் தர்மதுரை தயாரிப்பாளர்