Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபரில் வர்றாருப்பா சீயான்

அக்டோபரில் வர்றாருப்பா சீயான்
, செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (20:02 IST)
பீமா, அந்நியன், ஐ போன்ற கண்டங்களில் இரண்டு மூன்று வருடங்கள் மாட்டிக் கொள்வது விக்ரமின் ஜாதகம். ஐ, அந்நியனில் பெயராவது கிடைக்கும். பீமா போன்ற படங்களில்...? மிச்சமாவது 'பெய்ன்'தான்.
 

 
இனிமேல் இந்த தவறுகளை செய்யக் கூடாது என்று அவர் ஒப்புக் கொண்ட படம், 10 எண்றதுக்குள்ள. தொடங்கிய மூன்றே மாதத்தில் ரிலீஸ் என்பது திட்டம். ஆனால், தலைக்கு மேலிருக்கும் சனி சாமானிய ஆளில்லையே. 
 
தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சனைகளால் படம் தாமதமாகி, நேற்று ஞாயிறுதான் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். ஏற்கனவே டப்பிங் வேலைகள் தொடங்கி நடந்து கொண்டிருப்பதால் செப்டம்பர் 10 பாடல்களை வெளியிட்டு, அக்டோபர் 21 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு படத்தை வெளியிட முன்பு முடிவு செய்திருந்தது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil